Subscribe Us

header ads

வன்னி வாழ் முஸ்லிம்கைளை அங்கிருந்து வெளியேற்ற சதிகாரர்கள் கூட்டாக நடவடிக்கை இதற்கு தளம் அமைக்கின்றாரா?முன்னாள் ஜனாதிபதி ?


இந்த நாட்டு சிறுபான்மை மக்களால் புறக்கணிக்கபட்ட நிலையில் இந்த மக்களையும்,இந்த மக்களின் அரசியல் தலைமைகளையும் பழிதீர்க்க துடிக்கும் ஒரு செயற்பாட்டை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செய்ய ஆரம்பித்துள்ளது இந்த நாட்டில் இன்னும் இனவாதிகள் இருக்கின்றார்கள் என்பதை புடம் போட்டுகாட்டும் ஒன்றாகவுள்ளது.
கட்நத 2005 ஆம் ஆண்டு முதல் 2015 ஜனவரி 7 ஆம் திகதி வரை நிறைவேற்று ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ பயங்கரவாதத்தை ஒழித்து இந்த நாட்டு மக்கள் நிம்மதியாக வாழும் ஒரு சூழலை ஏற்படுத்துவார் என்ற நம்பிக்கையில் அவருக்கு இலங்கை வாழ் முஸ்லிம்கள் தமது முழுமையான ஆதரவினை வழங்கினார்கள்.அதுவும் குறிப்பாக வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் எவ்வித  நிபந்தனைகளுமின்றி தமது வாக்குகளை வழங்கி வந்தார்கள்.ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்கு பின்னால் வடக்கு முஸ்லிம்கள் இருக்கின்றார்கள் என்ற செய்தியினை சர்வதேசம் அறிந்திருந்தது.
இந்த நிலையில் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இந்த அரசாங்கத்தில் அமைச்சராக றிசாத் பதியுதீன் இருந்தார்.அவரது பணிகளை அவர் சரியாகச் செய்தார்.மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த போது தமிழ் மக்களின் மீள்குடியுற்றத்தினை பல தியாகங்களை செய்து மேற்கொண்டார்.குறுகிய காலத்தில் அம்மக்களது அடிப்படை தேவைகளை நிறைவு செய்தார்.இந்த மீள்குடியேற்றத்தின் பின்னர் இடம்பெயர்க்கப்பட்ட ஒரு இலட்சம் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் நடவடிக்கையெடுக்க முற்பட்ட போது,அவரது அமைச்சுப் பதவி மாற்றப்பட்டது.அத்தோடு மட்டுமில்லாமல் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு எதிராக திட்டமிடப்பட்ட சதிகளும்,தடைகளும் அரங்கேற்றப்பட்டன.
இந்த தடைகளுக்கு மத்தியில் வன்னி மாவட்ட மக்களின் வாக்குப்பலத்தினைக் கொண்டு அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் தமது மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் பெரும் போராட்டங்களை நடத்தினார்.இதற்கு எதிரான சக்திகள் ஒன்று சேர்ந்து பல திசைகளில் இருந்தும் தாக்குதல்களை நடத்தின.அந்த சந்தர்ப்பங்களிலும் தான் சோர்வைடையாமல் இந்த மக்களது மீள்குடியேற்றம் மற்றும் தேவைகள் தொடர்பில் அதீத பிரயத்தனங்களை அமைச்சர் றிசாத் பதியுதீன் செய்தார் என்பதற்கான ஆதரங்கள் இன்று வடக்கில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம்கள் சான்று பகர்வார்கள்.
மன்னாரில்,வவுனியாவில்,முல்லைத்தீவில் முஸ்லிம்களுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான காணிகளை இராணுவத்தின் தேவைக்கும்,வன இலாக்காக்களின் தேவைகளுக்குமாக எடுக்கப்பட்ட போது,இந்த மக்களின் பிரதி நிதியாக நின்று ஜனாதிபத மற்றும் பாதுகாப்பு செயலாளருடன் பல முறை பேசி இந்த காணிகளை வழங்க வேண்டும் என்ற போதும்,அது இடம் பெறவில்லை.அதற்கு மாற்றமாக அரச காணிகள் விடுவிக்கப்பட்டன.இந்த காணிகள் விடுவிக்கப்பட்டு அவைகளுக்கான உறுதிகளை வழங்கும் போது தடைகள் வந்தன.இவ்வாறு துன்பங்களுக்கு மெல் துன்பங்கைளை அனுபவித்த மக்களின் மீள்குடியேற்றம் இன்னும் திட்டமிடப்பட்ட முறையில் இடம் பெறாத நிலையில் ,இனவாதிகளுடன் சேர்ந்து முஸ்லிம்களுக்கும்,சிறுபான்மையினருக்கும் எதிராக செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி மீண்டும் வடக்கில் வாழும் முஸ்லிம்களை துரத்தும் வகையில் இனவாத குழுக்களுக்கு ஒட்சிசன் வழங்கும் வேலையினை ஆரம்பித்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் ஊழல்,மோசடி செய்தவர்களை கைது செய்யும் வேலையினை முன்னெடுத்துள்ளது.இந்த வகையில் முன்னாள் பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கைது செய்யப்பட்ட தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.அவர் மீதான குற்றச்சாட்டு மெதாடர்பில் விசாரணைகள் இடம் பெறுகின்றன.அதே போல் முன்னாள் ஜனாதிபதியின் மனைவி சிரந்தி ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகள் பரிசோதிகப்படுகின்றன.இந்த விசாரணைகள் எல்லாம் தரவுகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுகின்றன.இவ்வாறான நிலையில் தனது சகோதரர் கைது செய்யப்பட்டார் என்பதற்காக மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வடக்கில் மீள்குடியேற்றப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு சட்ட பூர்வமாக காணிகளை பெற்றுக் கொடுத்த அமைச்சரான றிசாத் பதியுதீன் கைது செய்யப்பட வேண்டும் என்றும் மேடையில் பேசுவதன் தர்மம் என்ன என்ற கேள்வியினை கேற்க முடிகின்றது.
முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்கள் தமது மண்ணில் மீள்குடியேற தேவையான காணிகள் அடையாளப்படுத்தப்பட்ட போது அதற்கு எதிராக செயற்பட்டவர் யார் என்பது தொடர்பிலும் மக்கள் நன்கு அறிவார்கள்.முழு வடக்கினையும் தமது கைப்பைக்குள் வைத்துக் கொண்டு இரானுவ மயமாக்களுக்கு சென்றவர்கள்,இன்று அவர்கள் செய்த குற்றங்களுக்கு தண்டனை அனுபவிக்கின்ற போது அதில் பங்காளியாக அமைச்சர் றிசாத் பதியுதீனை விரல் நீட்டிக் காட்டுவது,வன்னியில் இருந்து உதயமாகி இன்று முழு நாட்டு முஸ்லிம்,தமிழ் மக்களுக்கு தேசிய தலைமைத்துவத்தினை வழங்கிவரும் அமைச்சர் றிசாத் பதியுதீனை அரசியல் ரீதியில் பலமிழக்கச் செய்து,வடக்கு முஸ்லிம்களை மீண்டும் அங்கிருந்து இனச் சுத்திகரிப்பு செய்யும் பணிக்கான முஸ்தீபு என்றால் அது மிகையாகாது.
வில்பத்து காட்டினை அழித்து அந்த காட்டினை தமதாக்கி கொண்டார் என அமைச்சர் றிசாத் பதியுதீன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அப்பட்டமான பொய்யாகும்,அன்று மஹிந்த அரசாங்கத்தில் உள்ளிருந்து முஸ்லிம்களின் மத தளங்கள்,பொருாளதார நிலையங்கள்,மற்றும் கலாசார விழுமியங்கள் மீது மேற் கொள்ளப்பட்ட அடாவடித்தனங்களுக்கு எதிராக மௌனமாக இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று மீண்டும் அந்த வேளையினை செய்ய ஆரம்பித்துள்ளார் என்பதை காணமுடிகின்றது.
இந்த நிலையில் வன்னியினதும்,தேசியத்தினதும் முஸ்லிம்,தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் அநீதிக்கு எதிராக போராடும் அமைச்சர் றிசாத் பதியுதீன் போன்ற அரசியல் தலைமைகளை பாதுகாக்க வேண்டியது எமது கடமையாக உணர வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.
(அபூ அஸ்ஜத்)

Post a Comment

0 Comments