ஐ.பி.எல். போட்டியின் முதல் லீக் ஆட்டத்தில் 168 ஓட்டங்கள் குவித்த மும்பை அணி, கொல்கத்தா அணியிடம் வீழ்ந்தது.
மும்பை அணி நிர்ணயித்த 168 என்ற வெற்றி இலக்கை துரத்திய கொல்கத்தா அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியீட்டியது.
8ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் முதல் லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டனில் நேற்று இரவு 8 மணிக்கு ஆரம்பமானது. இதில் நடப்பு சம்பியனான கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் களமிறங்கின.
இரு அணிகளும் சம பலம் பொருந்தியவை என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணியின் சார்பில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக ரோஹித் சர்மாஇ பிஞ்ச் ஆகியோர் களமிறங்கினர். பிஞ்ச் 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய ஆதித்ய டாரேஇ ரோஹித்தின் அதிரடிக்கு துணை நின்றார். ரோஹித் சர்மா ஆட்டமிழக்காமல் 98 ஓட்டங்களை விளாசினார்.
ரோஹித்துடன் பின்இணைந்த ஆண்டர்சன் பொறுப்புடன் ஆடியதால் ஓட்ட எண்ணிக்கை உயர்ந்தது. ஆண்டர்சன் தனது பங்கிற்கு பந்துகளை பவுண்டரிஇ சிக்சர்களாக விளாசி அரைச் சதம் கடந்தார். இதனால் 20 ஓவர் முடிவில் மும்பை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 168 ஓட்டங்களைக் குவித்தது. இதையடுத்து 169 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் களமிறங்கியது.
அதன்படி கொல்கத்தா அணி 18.3 ஓவர்களில் மூன்று விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
கொல்கத்தா அணியின் தலைவர் கம்பிர் 57 ஓட்டங்களைப் பெற்றார். உத்தப்பா(9), பாண்டே(40), யாதவ் ஆட்டமிழக்காமல் 46 ஓட்டங்களையும், பத்தான் ஆட்டமிழக்காமல் 14 ஓட்டங்களையும் பெற்றனர். அதன்படி எட்டாவது லீக் ஆட்டத்தின் முதலாவது போட்டியில் கொல்கத்தா அணி தனது வெற்றியைப் பதிவு செய்தது.


0 Comments