Subscribe Us

header ads

யேமனில் நிர்க்கதியான 40 இலங்கையர்கள் ஜி பூட்டியில் தஞ்சம்


யேமனில் இடம்பெற்று வரும் யுத்தம் காரணமாக நிர்க்கதிக்குள்ளான நிலையில் மீட்கப்பட்ட 40 இலங்கையர்கள், ஜி பூட்டி இராஜியத்திற்கு அடைத்துச் செல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

சீன கப்பலொன்றின் மூலம் ஜி பூட்டி இராஜியத்தை இலங்கைப் பணியாளர்கள் இன்று காலை 6 மணியளவில் பாதுகாப்பாக  சென்றடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த இலங்கையர்களை ஜி பூட்டி இராஜியத்திலிருந்து விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை குறித்த கப்பலில் இலங்கையர்களுடன், 25 சீன பிரஜைகளும் யேமனின் கோடேடா துறைமுகத்தில் இருந்து ஜி பூட்டிக்கு சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments