அரசியலமைப்புச் சட்டத்தின் 19வது திருத்தச் சட்டத்தை
நாடாளுமன்றில் நிறைவேற்றுவதற்கு ஆதரவாக வாக்களிக்காத நாடாளுமன்ற
உறுப்பினர்களுக்கு அடுத்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுவதில்லை
என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும்
தீர்மானித்துள்ளன.
19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை
நிறைவேற்றியாக வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர்
ரணில் விக்ரமசிங்கவும் தங்களுக்கிடையில் பொது இணக்கத்திற்கு வந்துள்ளனர்.
இந்த இணக்கத்தின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
19வது திருத்தச் சட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில்
சமர்ப்பித்து அதனை நிறைவேற்றிய பின்னர் நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத்
தேர்தலை நடத்த இரு கட்சிகளின் தலைவர்களும் திட்டமிட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில், 19வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக வாக்களிப்பது
குறித்து சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர்,
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் நாடாளுமன்ற
உறுப்பினர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து
தெரியவந்துள்ளதை அடுத்தே ஜனாதிபதியும், பிரதமரும் மேற்படி தீர்மானத்தை
எடுத்துள்ளனர்


0 Comments