இலங்கையில் நிறுவப்பட்டுள்ளதாக கூறப்படும் நல்லாட்சியின் நூறு நாள் வேலைத் திட்டத்தில் 19 சீர் திருத்தமே
முதன்மை திட்டமாகும்.அரசியல் அமைப்பினை மாற்றுவதற்கு மூன்றில் இரண்டு பெரும் பான்மை
பெற்று சில வரைவுகளினை மாற்றலாம்.இன்னும் சிலவைகளுக்கு மூன்றில் இரண்டு பெரும்
பான்மையோடு சேர்த்து சர்வஜன வாக்கெடுப்பும் நடாத்தப்பட்டாலே வரைவுகளினை மாற்றலாம்.சர்வஜென
வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு இவ் வாரைவுகளினை மாற்ற வேண்டுமாக இருந்தால் அதற்கு
நீண்ட காலப் பகுதி தேவைப்படும் என்பது சாதாரணமாக அறியக் கூடிய ஒன்று.
பாராளுமன்றம் மிகவும் அவசரமாகவும் கலைக்கப்பட வேண்டும் என நாள்க்
குறித்த பிரதமர் ரணில் தலைமையிலான அரசு இச் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்படும்
அரசியல் அமைப்பில் மாற்றம் அவசியம் உள்ள வரைவுகளில் கை வைத்திருக்கக் கூடாது.ஆனால்,கை
வைத்து தற்போது அதனை மீண்டும் மாற்றம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதானது
இவ் அரசினை நகைப்பிற்குள்ளாக்குகிறது என்றே கூற வேண்டும்.
எது எவ்வாறு இருந்தாலும் இவ் சீர் திருத்தம் மூலம் மூலம் பிரதமர்
ரணில் தலைமையிலான அரசு எதை சாதிக்க அதீத பிரயத்தனத்திற்கு மத்தியில் நிறைவேற்று
அதிகாரம் உள்ள ஜனாதிபதி முறைமையினை ஒழித்து ஜனாதிபதியின் அதிகாரத்தினை குறைத்து
பிரதமரிற்கு அதிகாரத்தினை அதிகரித்து எதிர் வரும் பாராளுமன்றத் தேர்தலில் அதிக
ஆசனங்களினைப் பெற்று ஜனாதிபதியினை
டம்மியாக்கி முற்றாக ஆட்சியினை தன் வசப்படுத்துவதே அதன் திட்டம் எனலாம்.இதற்கே
ஐ.தே.க மிகவும் பிரயத்தனம் எடுத்தது.இப்போது,சர்வஜன வாக்கெடுப்பு தேவையான
அனைத்துச் சட்டங்களும் பிரதமர் அதிகாரங்களினை வலுப்படுத்துவதே!இப்போது அது இல்லை
என்று ஆகிட்டு.இப்போது காலம் அவகாசம் வழங்கினால் சர்வஜன வாக்கெடுப்பிற்கு சற்று
முயற்சிக்கலாம்.அனால்,ஜனாதிபதி மைத்திரி பாராளுமன்றத்தினை கலைக்கும் காலத்தினை
கூறி விட்டாரே! கொண்டு வந்த சீர் திருத்தத்தினை நிறைவேற்றினால் பாராளுமன்றம்
கலைக்கப்படும்,தோற்றுப் போனால் ஐ.தே.க நகைப்பிற்குள்ளாகும்.
மேலும்,ஜனாதிபதி அதிகாரங்கள் குறைக்கப்பட்டு பிரதமர் அதிகாரங்கள்
அதிகரிக்கப்படும் என்பது நூறு நாள்
வேலைத் திட்டத்தில் உள்ளதாகும்.நூறு நாள் வேலைத் திட்டத்தினை முன்னாள் சட்டமா
அதிபர் சரத் என் சில்வா வரைந்ததாக பெருமை பாராட்டினார்கள்.பல வேலைப் பழுக்களுக்கு
மத்தியில் சர்வஜன வாக்கெடுப்பினையும் நடாத்த முடியும் என்ற அபரிதமான நம்பிக்கையில்
இவ் வரைவினை மேற்கொண்டவர்கள் இருந்தார்களா..?? அல்லது அறியாமையில்
இருந்தார்களா..?? அல்லது மக்களை ஏமாற்றியாவது வெற்றி வாகை சூடும் எண்ணத்தில்
கூறினார்களா..?? என்ற வினாக்கள் எழுகின்றதல்லவா..??
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.


0 Comments