Subscribe Us

header ads

10 மடங்கு பெரிய அளவிலான கோல்ட் பிஷ் ரக மீன்கள்


மேற்கு அவுஸ்­தி­ரே­லியா விலுள்ள ஆறுகள் மற்றும் குளங்­களில் சாதா­ரண அள­வை­விட 10 மடங்கு பெரி­தான கோல்ட்பிஷ் ரக மீன்கள் பிடிக்­கப்­பட்­டுள்­ளன.  

வீடு­களில் செல்­லப்­பி­ரா­ணி­களாக வளர்க்­கப்­படும் கோல்ட் பிஷ், "கொய்" போன்ற மீன்­களை அவற்றின் உரி­மை­யா­ளர்கள் நீர்­நி­லை­களில் விட்­டுச்­சென்ற நிலையில் இம்­மீன்கள் பிர­மாண்­ட­மாக வளர்ந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 

சாதா­ர­ணமாக 100 கிராம் எடையில் காணப்­படும் கோல்ட் பிஷ் ரக மீன்கள் 2 கிலோ­கிராம் அள­வுக்கு வளர்ந்த நிலையில் பிடிக்­கப்­பட்­டுள்­ளன. செல்­லப்­பி­ரா­ணி­க­ளாக வளர்க்­கப்­படும் கொய் ரக மீன்கள் 8 கிலோ­கிராம் அள­வுக்கு வளர்ந்த நிலையில் காணப்­பட்­டன.  

ஆனால், இம்­மீன்­களில் அப­ரி­மித வளர்ச்சி குறித்து சூழ­லியல் விஞ்­ஞா­னிகள் மகிழ்ச்­சி­ய­டை­ய­வில்லை. 


மாறாக, இந்த மீன்கள் மேற்­படி நீர்­நி­லை­களில் இயற்­கை­யாக காணப்­படும் மீன் இனங்­களை அழி­வ­டையச் செய்­வதன் மூலம் சூழல் பாதிப்பை ஏற்­ப­டுத்தும் என எச்­ச­ரித்­துள்­ளனர்.  

"இத்­த­கைய மீன்­களை நீர்­நிலை­களில் விடு­வதன் மூலம் ஏற்­ப­டக்­கூ­டிய சுற்­றா­டல்­பா­திப்பு­ களை மக்கள் பலர் அறி­யா­ம­லுள்­ளனர் என முர்டோக் பல்­க­லைக்­க­ழ­கத்தின் மீன் மற்றும் மீன்பிடி ஆராய்ச்சித் திணைக்கத்தின் பணிப்பாளரான டாக்டர் டேவிட் மோர்கன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments