Subscribe Us

header ads

100 வயது மூதாட்டி பின்புற நீச்சல் போட்டியில் உலக சாதனை


ஜப்பான் நாட்டிலுள்ள மட்சுயாமா என்ற நகரில் மாஸ்டர்ஸ் நீச்சல் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் பெண்கள் பிரிவுக்கான பின் புற நீச்சல் போட்டியில் 100 வயது மூதாட்டி மிய்க்கோ நகோக்கா கலந்து கொண்டார். அவர், 1500 மீட்டர் தூரத்தை 1 மணி நேரம் 15 நிமிடம் 54 விநாடிகளில் பின் புறமாக நீச்சலடித்து உலக சாதனை படைத்துள்ளார்.
 
1914ஆம் ஆண்டு பிறந்த இவர் நீச்சல் தெரியாமல் இருந்து வந்தவர். இந்நிலையில், அவரது முழங்காலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக 82 வயதில் நீச்சல் பயிற்சியைக் கற்றுக்கொண்டுள்ளார்.
 
இதைத் தொடர்ந்த, கடந்த 2002 ஆம் ஆண்டு நியூசிலாந்தில் உள்ள கிரைஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் முதல் முறையாக கலந்துகொண்டார். அங்கு 50 மீட்டர் பின்புற நீச்சல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

Post a Comment

0 Comments