பிரி்த்தானியாவின் லிங்கன்ஷயர் மாகாணாத்தில் இயங்கும் பூனைகளுக்கான முதியோர் இல்லம் பற்றிய செய்தி கிடைத்துள்ளது. வீடுகளில் செல்லப் பிராணியாக வளரும் அதிகமான மிருகங்கள் அதன் உரிமையாளருக்கு முன்னர் இறந்துவிடும். திடீர் விபத்து, நோய் போன்ற காரணங்கள் அல்லாதபோது, தமது முழு வாழ் நாளையும் உரிமையாளனுடன் கழித்துவிட்டு, முதமைப் பருவத்தை அடைந்து இயற்கை மரணமத்தை அடைந்துவிடும்.
தனது செல்லப் பிராணி மரணமடைவதைத் தாங்க முடியாத உரிமையாளர்கள் பலர் மன அழுத்தத்திற்கு ஆளாகுவது உண்டு. குறிப்பாக குடும்ப உறவுகள் இல்லாமல் தனிமையில் வாழுவோர் இம் மன அழுத்தத்திற்கு அதிகம் ஆளாகின்றனர்.
இம் மனிதர்களின் நிலையை லிங்கன்ஷயர் பூனை முதியோர் இல்லத்தை உருவாக்கியவர்கள் கவனத்திற்கொண்டனர். தான் வளர்க்கும் பூனை முதுமை வயதை அடைந்தவுடன் இம் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடலாம். தனது செல்லப் பிராணி அதன் மூப்புப் பருவத்தில் அமைதியாகக் கழிக்கின்றது என்ற நிம்மதி முன்குறிப்பிட்ட மனிதர்களுக்கு கிடைக்கின்றது.
ஏழு ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள வசதியான வீடொன்றில் சுமார் 400 பூனைகள் வரை முதுமை வயதின் ஓய்வை அனுபவிக்கின்றன. ஒரு பூனையை இவ் இல்லத்தில் சேர்க்கும்போது 850 பவுன்ட் (175,000 ரூபா) செலுத்த வேண்டும். கட்டணம் அதிகம் போல் தோன்றினாலும் முதியோர் இல்லத்தில் அனுமதிக்கப்படும் பூனைத் தாத்தா - பாட்டிகளின் எண்ணிக்கை குறைவதாக இலலை.
மூலம்: லங்காதீப
நன்றி -TPT-



0 Comments