Subscribe Us

header ads

இன்று கிழக்கு மாகாண சபையின் புதிய தவிசாளர் தெரிவு (PHOTOS)

பைஷல் இஸ்மாயில் -


கிழக்கு மாகாண சபையின் அமர்வு இன்று (16) இரா. துறைரட்னம் தலைமையில் கூடியது.

இவ்வமர்வில்  கிழக்கு மாகாண சபையின் புதிய சபாநாயகராக  ஜக்கிய தேசியக்கட்சியின் சந்திர தாஸ கலப்பதி தெரிவு செய்யப்பட்டார்.

இதன் போது புதிய சபாநாயகருக்கு பாராட்டுக்கள் வழங்கப்பட்டதுடன் சபை ஜந்து நிமிடத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் புதிய சபாநயகரின் தலைமையில் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு  உரை நிகழ்த்திய பின்னர் மீண்டும் அடுத்த அமர்வு  எதிர்வரும் 31 ஆம் திகதி நடைபெறும் என அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து புதிய சபாநாயகர் தனது உத்தியோகபூர்வ காரியாலயத்தில் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் உட்பட கிழக்கு மாகாண சபை அமைச்சர்களும், உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.








Post a Comment

0 Comments