பைஷல் இஸ்மாயில் –
மட்டக்களப்பு மாவட்ட வாகரை பிரதேத்திலுள்ள கடற்றொழில் மீனவர்கள் பயணிக்கும் கொங்கிறீட் வீதி நீண்டகாலமாக சேதமடைந்து காணப்படுவதாக அப்பிரதேச மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
வாகரை பிரதேச கடற்றொழில் மீனவர்களுக்கென்று இருக்கும் ஒரேயொரு கொங்றீட் வீதி அது இதுவாகும். இந்த வீதி கடந்த வெள்ளப்பெருக்கினால் சேதடைந்துள்ளதாகவும் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல தடவைகள் கோரிக்ககை விடுத்தும் இதுவரையில் எவ்வித பலனும் கிடைக்கவில்லை என்றும் அப்பிரதேச மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் எஸ்.பரமன் என்ற மீனவர் கருத்து தெரிவிக்கையில்,
இங்குள்ள கடற்றொழில் மீனவர்கள் தங்களின் மீன்பிடி படகுகளுக்கு கொண்டு செல்லும் எரிபொருட்களை கொண்டு செல்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும், மீன்களை மொத்தமாக கொள்வனவு செய்யவரும் வெளியூர் மொத்த வியாபாரிகளின் வாகனங்களை உரிய இடத்துக்கு கொண்டு வரமுடியாது இருப்பதனால் மொத்த வியாபாரிகளின் வருகை குறைவடைந்துள்ளதாகவும், பிடிபடும் மீன்களை வியாபாரத்துக்காக மிக நீண்ட தூரம் தலையில் வைத்து சுமந்துகொண்டு செல்லுவதாகவும் இந்த மீனவர் தெரிவித்தார்.
இந்த கடல் தொழிலை நம்பி அன்றாட வாழ்க்கையை நடாத்திவரும் அப்பிரதேச மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், அப்பிரதேச அதசியல்வாதிகளும் கவனத்திற்கொண்டு சேதமடைந்து காணப்படும் இந்த கெங்றீட் வீதியை உடனடியாக செப்பனிட்டு கொடுக்க முன்வரவேண்டும்.





0 Comments