Subscribe Us

மட்டக்களப்பு யுவதிக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்: பொதுபலசேனா


சிகிரியா குன்றின் சுவர்களில் கிறுக்கியதாக கூறப்பட்டு தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ் யுவதிக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்று பொதுபலசேனா கோரிக்கை விடுத்துள்ளது.

பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளார்.

இனங்களுக்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் ஜனாதிபதி பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இதன் அடிப்படையிலேயே அவர் தேசிய கீதம் தமிழில் பாடப்படலாம் என்றும் என்ற அறிவிப்பையும் விடுத்துள்ளார்.

இந்தநிலையில் இனக்குரோத மனப்பான்மையை தவிர்க்கும் முகமாக மட்டக்களப்பு யுவதிக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஞானசாரர் கோரியுள்ளார்.

இதேவேளை இறுதிப்போரை வெற்றி கொண்டமைக்காக சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்சல் தரம் வழங்கப்படுவதை போன்று விமானப்படை மற்றும் கடற்படை தளபதிகளுக்கும் ஐந்து நட்சத்திர அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று ஞானசாரர் கேட்டுள்ளார்.

Post a Comment

0 Comments