இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை இன்று மாலை சந்தித்துள்ளார்.
கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
மோடியின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின்போது ஏற்பாடு செய்யப்பட்ட 40இற்கும் மேற்பட்ட உத்தியோகபூர்வ சந்திப்புகளின் இறுதிச் சந்திப்பாக இது அமைந்தது என இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஷெய்யத் அக்பதுர்டீன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இரு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்த பிரதமர் மோடி, இந்தியா பயணமாகதாக விமான நிலையச் செய்திகள் தெரிவிக்கின்றன.


0 Comments