Subscribe Us

header ads

பலாத்காரம் செய்தால் அமைதியாக இருங்கள் - குற்றவாளி முகேஷ் சிங் (வீடியோ)


இந்தியா முழுவதும் விஸ்வரூபம் எடுத்தது “இந்தியாவின் மகள்” என்ற ஆவணப்படம்.

இரண்டு ஆண்டுகள் கடந்த விட்ட நிலையில், தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது இந்தியாவின் மகள் என்ற ஆவணப்படம்.

நிர்பயா-வுக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமையை அடிப்படையாக வைத்து, லெஸ்லி உட்வின் என்ற பிரிட்டிஷ் பெண்மணி இந்த ஆவணப்படத்தை தயாரித்து இருக்கிறார்.

அதில், வன்கொடுமைக்கு உள்ளான மருத்துவ மாணவியின் பெற்றோர் உள்ளிட்டவர்களின் நேரடி பேட்டிகள் இடம் பெற்றுள்ளன.

மேலும் முக்கிய குற்றவாளியான முகேஷ் சிங்-கின் பேட்டியும் இடம் பெற்றுள்ளது.

அதில், அவனது திமிரான பேச்சு மக்கள் மத்தியில் கடுங்கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரவு நேரத்தில் பெண்கள் வெளியே வருவது தவறு, அவ்வாறு வந்தால் நாங்கள் அப்படித்தான் செய்வோம்.

இதில் அந்த பெண் தான் குற்றவாளி நாங்கள் அல்ல, மானபங்கப்படுத்தும் போது பெண்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தால், அவர்கள் கொல்லப்படமாட்டார்கள் என்று கொக்கரித்துள்ளான்.

ஒரு குற்றவாளி தண்டனை வாங்கிய பிறகு கூட, அதே மனநிலையில் பேசியிருப்பது கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

சமூக ஆர்வலர்கள், தலைவர்கள், பொதுமக்கள் என்று அனைவரும் தங்கள் கோபங்களை டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப், யூடியூப் என சமூகவலை தளங்களில் தட்டிவிட, இணையதளமே சூடுபிடித்து எரிந்தது.

இதனைத் தொடர்ந்து, அந்த ஆவணப்படத்தை ஒளிபரப்ப மத்திய அரசு தடை விதித்தது.

ஆனால், இந்த படத்தின் தயாரிப்பாளர் முறையான அனுமதியுடன் இந்த ஆவணப்படத்தை எடுத்துள்ளதால் இந்த விவகாரத்தில் கொஞ்சம் சிக்கல் ஏற்பட்டது.

Post a Comment

0 Comments