Subscribe Us

header ads

சோலார் விமானம் வெற்றிகரமாக மஸ்கட் வந்தடைந்தது! இன்று இந்தியாவை நோக்கி பயணத்தை தொடங்கியது!(PHOTOS )



துபாய்.துளியளவும் எரிபொருள் உபயோகிக்காமல் முழுக்க சூரிய சக்தியில் இயங்கும் வகையில் சோலார் இம்பல்ஸ் 2 (எஸ்ஐ2) என்ற சோலார் விமானம் தயாரிக்கப்பட்டு நேற்று இதன் பயணத்தை அபுதாபியிலிருந்து நேற்று காலை தொடங்கியது முதல் கட்டமாக ஒமான் தலைநர் மஸ்கட்டில் நேற்று இரவு வெற்றிகரமாக தரையிற‌ங்கியது 2வது சுற்றுபயணமக்க இன்று காலை இந்தியாவின் அஹமதாபாத நகரை நோக்கி பயணத்தை தொங்கியது

617 மணி நேர பயணத்தில் உலகம் முழுவதும் 35 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை கடக்க உள்ளது . ஆண்ட்ரே போர்ஷ்பெர்க் பைலட்டாக இந்த விமானத்தை இயக்கி வருகிறார்.

இந்தியாவின் அகமதாபாத் வந்த‌ பின்னர் அங்கிருந்து வாரனாசி வருகை தர உள்ளது.மேலும் சீனா, பசிபிக் கடல், ஐரோப்பா மற்றும் வட ஆப்ரிக்க உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு மேலே பறந்து வரும் ஜூலை மாதம் அபுதாபியில் தரை இறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க சாதனை என சோலார் தொழில் நுட்ப வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.மேலும் எரிபொருள் தேவைகளுக்காக‌ அதிகளவில் வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா போன்ற நாடுகளில் இது போன்ற தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்தால் அந்தந்த நாடுகளுக்கு பெரும் பலனை அளிக்கும்





Post a Comment

0 Comments