Subscribe Us

header ads

இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி மைத்திரி வாழ்த்து - ஸ்கைப் மூலம் உரையாடினார்


இலங்கை கிரிக்கெட் அணி சிறந்த எட்டு அணிகளில் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கை அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஸ்கைப் தொழில்நுட்பத்தின் ஊடாக ஜனாதிபதி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இதன் போது விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க மற்றும் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் உயர் அதிகாரிகளும் உடனிருந்தனர்.

இந்த உலகக்கோப்பை தொடரில் விசேட திறமைகளை வெளிபடுத்தி உலக சாதனை செய்த குமார சங்கக்காரவுக்கு நாட்டு மக்கள் சார்பில் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.




Post a Comment

0 Comments