கட்டார் நாட்டின் தலைவர் (அமீர்) தமீம் பின் ஹமத் அல்தானி அவர்கள்விரைவில் இலங்கை வரவுள்ளார் இலங்கையுடன் முஸ்லிம் நாடுகள் கி.மு.இருந்தே நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளன.
முத்து,இரத்தினம் யானைத்தந்தம் ,வாசனை திரவியம் ,ஏலம் ,கறுவா போன்றன இலங்கையில் இருந்து ஏற்று;மதி செய்யப்பட்டுள்ளன.இலங்கை அரசுக்கு நன்கொடை நிதிகள் , கடனுதவிகள் நிவாரணங்கள்,தொழில்வாய்ப்புக்கள் போன்றவற்றை முஸ்லிம் நாடுகளே அதிகமதிகம் வழங்கிவருகின்றன.
மேலும் 1990 ல் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடபுல முஸ்லிம்கள் ஒரே நாளில் ஏதிலிகளாக மாற்றப்பட்டனர்.
இவர்களை மீளக்குடியேற்றும் விடயத்திலும் கட்டாரின் தனவந்தர்கள் குறிப்பிட்டளவு உதவி செய்து வருகின்றனர்.
நாட்டின் ஆட்சிப்பிரதேசத்தை விட்டு வெளியேறி இன்னொரு நாட்டில் வசித்தால் அகதி அந்தஸ்து கிடைக்கும்.மாறாக வடபுல முஸ்லிம் மக்களுக்கு உள் நாட்டில் இடம்பெயர்ந்தோர் எனும் பெயரே கிடைத்தது.இதனால் கிடைக்கவேண்டிய பல சர்வதேச உதவிகள் கைநழுவின.இம்மக்கள் அன்னிய மண்ணில் 24 வருடங்களை(8772 நாட்களை)கழித்திருப்பது ஒரு பெரும் அநியாயமாகும்.பலஸ்தீன மக்களுக்கு ஏற்பட்ட அநியாயம் போன்றதே.
மிகக் குறுகிய தொகையினரே வடக்கே மீளக்குடியேறி உள்ளனர்.ஏனையோர் மீளக்குடியேறாமைக்கு குடியிருப்பு நிலப்பிரச்சினையும்,வீடில்லாப்பிரச்சினையும் காரணமாகும் ஆகும்.இம்மக்களை மீளக்குடியேற்ற பகீரதப்பியத்தனம் மேற்கொள்ளும் அமைச்சர் றிசாத் பதியுதீனின் பணிகள் காலத்தால் மறக்கமுடியாதவை.
வரும் சவால்களையெல்லாம் எதி;ர்கொண்டு முன்னேறிச்செல்லும் இவரின் அரசியல் பயணத்தைப் பார்த்து பொறுக்க முடியாத ஒரு நயவஞ்சகக் கூட்டம் பலகோணத்தில் இவருக்கெதிரான போலிக்குற்றச்சாட்டுக்களை வெளியிடுகின்றன.
இதைப் பார்க்கும் போது சாத்தான் வேதம் ஓதுவது போல உள்ளது…..வாய்ச்சொல் வீரனைவிட.செயல்வீரனையே வன்னி முஸ்லிம்கள் விரும்புகின்றனர்.
இலங்கைவரும் கட்டார் அமீர் குழவினரை வடமாகாணத்திற்கு அழைத்துச்சென்று. அங்கே அழிக்கப்பட்டுக்கிடக்கும் முஸ்லிம் கிராமங்களை; காண்பிக்க வேண்டிய பொறுப்பு முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு உண்டு.
இவர்களிடம் வடமாகாண முஸ்லிம்களுக்குத் தேவையான வீடுகளைக் கட்டித்தருமாறு பலமான,நியாயமான கோரிக்கையை விடுங்கள்.இவ்விடயத்தில் அதிகம் உழைக்கவேண்டிய பாரிய சமூகப்பொறுப்பு அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களிடமும்,அமைச்சர் றஊப் ஹக்கீமிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.கட்சி அரசியலுக்கு அப்பால் சென்று இவ்விடயத்தில் ஒன்றுபடும் நேரம் இது.காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்வோம்


0 Comments