Subscribe Us

header ads

சம்மாந்துறை மாஹிர் பவுன்டேசன் அமைப்பின் மாதாந்த கூட்டம்

(எம்.எம்.ஜபீர்)
 
சம்மாந்துறை மாஹிர் பவுன்டேசன் அமைப்பின்  மாதாந்த கூட்டம் அங்கத்தவர் வீ.எம்.ஜலால் அவர்களின் இல்ல வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
 
மாஹிர் பவுன்டேசனின் தலைவர் வை.வீ.சலீம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு பிரதம அதிதியாக மாஹிர் பவுண்டேசனின் ஸ்தாபகரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினருமான ஐ.எல்.எம். மாஹிர,; கௌரவ அதிதிகளாக ஸ்ரீ லங்கா  முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பகால போராளியுமான ஏ.எம்.ஏ.அஸீஸ், முன்னால் பிரதேச சபை உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பகால போராளியுமான எம்.ரீ.எம்.இஸ்மாயில்,  முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பகால போராளி ஆசிரியர் எம்.ஐ.எம்.நியாஸ், அமைப்பின் உறுப்பினர்கள் என பலரும்  கலந்து கொண்டனா.
 
இக்கூட்டத்தில்  சம்மாந்துறையின் அபிவிருத்திப்பணிகள், மற்றும் அரசியல் நடவடிக்கை  என்பன விசேடமாக ஆராயப்பட்டதுடன் எதிர் காலத்தில்  சம்மாந்துறை  பிரதேசத்தின்  பாராளுமன்ற உறுப்பினராக ஐ.எல்.எம். மாஹிர் அவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதற்கான காத்திரமான நடவடிக்கைகளையும் கிராம மட்டத்தில் இருந்து ஆரம்பிப்பதற்;கான திட்டங்களும் நடைமுறைப்படுத்துமாறு  இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அதிதிகளினால்  முன் வைக்கப்பட்டது.
 



 

Post a Comment

0 Comments