Subscribe Us

header ads

உலக கோப்பை நோகவுட் சுற்றில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரிசர்வ் டே! அது என்ன புதுசா...


உலக கோப்பை காலிறுதி, அரையிறுதி, பைனல் ரிசர்வ் டே என்ற நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. லீக் ஆட்டங்களில் இல்லாத இந்த நடைமுறை, நாக்-அவுட் (தோற்றால் வெளியேற்றம் ) கட்டத்தை ஆட்டம் எட்டியுள்ள நிலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அது என்ன ரிசர்வ் டே என்று தெரியுமா? வரும் 18ம் தேதி முதல் உலக கோப்பை காலிறுதி போட்டிகள் தொடங்க உள்ளன. ஒவ்வொரு போட்டிகளுக்கும் நடுவே ஒருநாள் இடைவெளி தரப்பட்டுள்ளது. இதைத்தான் ரிசர்வ் டே என்று கருத வேண்டும்.

இதன் முக்கிய காரணம் மழை ஏற்பட்டு  ரிசல்ட் கிடைக்காத போட்டிகளை, மறுநாளிலும் நடத்த இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், மாற்றப்பட்ட விதிமுறைகள் படி மூன்று முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

1) 19 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில், மழை பெய்து ஆட்டம் ஒத்தி வைக்கப்பட்டு தலா 46 ஓவர்களாக குறைக்கப்பட்டால், அப்படி ஓவர்களை குறைத்த பிறகும் மழையால் ஆட்டத்தை தொடர முடியாமல் போனால், அடுத்த நாள் ஆட்டம் மீண்டும் 50 ஓவர்கள் போட்டியாகவே தொடங்கும்.
2) மழையால் ஆட்டம் குறுக்கிட்டு தலா 46 ஓவர்களாக குறைக்கப்பட்டால், அதன்பிறகு ஒரு ஓவர் வீசப்பட்டு மீண்டும் மழையால் அன்று ஆட்டத்தை தொடர முடியாமல் போனால், மறுநாளில் 46 ஓவர்கள் கொண்ட போட்டியாகவே அது அமையும்.
3) டாஸ் போடப்பட்ட பிறகு மழையால் அன்று ஆட்டம் ரத்தானாலும், மறுநாள், டாஸ் போடாமலே ஆட்டம் தொடங்கும். அணி வீரர்களை மாற்றமும் செய்ய கூடாது.

Post a Comment

0 Comments