பி.முஹாஜிரீன்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சிக்கான அரசாங்கத்தை எதிர் காலத்தில் மேலும் சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்ல மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென காணி அமைச்சர் எம்.கே.டி குணவர்தன தெரிவித்தார்.
அரசின் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் ரண்விம காணி அளிப்பு உறுதி வழங்கும் வைபவம் நேற்று (09) திங்கட்கிழமை அம்பாறை நகர மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அம்பாறை மாவட்ட அரசாங் அதிபர் நீல் த அல்விஸ் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் காணி அமைச்சர் எம்.கே.டி. குணவர்தன தொடர்ந்து உரையாற்றுகையில்,
கடந்த அரசாங்கத்தில் நீண்ட காலமாக கிராமிய மக்களின் பல்வேறு பட்ட பிரச்சிணைகளுக்கு தீர்வு காணப்படாமல் உள்ளன. இவ் அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பிற்பாடு மக்களுக்கு துரிதமாகவும் சிறந்த முறையிலும் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை முன் கொண்டு செல்வதற்கு 100 நாள் அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ் மக்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகின்றன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஊழல் நிறைந்த கொடுங்கோல் ஆட்சியை புரிந்து வந்தார். இதனால் நன்மையடைந்தது அவரும் அவரது குடும்பமுமே. ஏழை மக்களுக்கு செல்ல வேண்டிய பணம் அவர்களுக்குள்ளேயே முடக்கப்பட்டு சுகபோக வாழ்க்கை வாழந்து வந்தார்கள். இவர்களுக்கு கடந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.
கடந்த காலங்களில் தமிழ், சிங்கள, முஸ்லிம்களை அழித்து அவர்களின் பொருளாதாரத்தை நசுக்கிய கருணா அம்மான் போன்ற தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தலைவர்களுக்கு மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் தலைமைப் பதவி கொடுத்து அராஜக ஆட்சி புரிந்து வந்தார். இவர்களுக் எதிராக கடந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்து மைத்திரி ஆட்சியை கொண்டுவருவதற்கு வாக்களித்த உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்.
கடந்த ஆட்சியில் அரசாங்க ஊழியர்கள் அடக்கி ஆளப்பட்டார்கள். மைத்திரி ஆட்சியில் அரசாங்க ஊழியர்கள் அவர்களது கடமையை வழங்குவதற்கு சுதந்திhம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.






0 Comments