Subscribe Us

header ads

ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுயுள்ள உலகின் தொழில்நுட்ப பணக்காரர்களின் பட்டியல்.


தொழில்நுட்ப உலகில் பணக்காரர்களாக இருப்பவர்களின் பட்டியல் ஒன்றை வெளியிட்டுயுள்ளது ஃபோர்ப்ஸ் நிறுவனம், இங்கு தொழில்நுட்ப உலகின் பணக்காரர்களாக இருப்பவர்கள் யார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

இந்தாண்டின் பட்டியலில் அமெரிக்காவை சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரிகள் அதிகளவில் இடம்பெற்றுள்ளனர்..

பில்கேட்ஸ்

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில் கேட்ஸ் உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.

லேர்ரி எல்லிஸன்

ஒரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான லேர்ரி எல்லிஸன் 51.3 பில்லியன் டாலர்களை உலகளவில் ஐந்தாம் இடத்தில் இருக்கிறார்.

ஜெஃப் பெசோஸ்

அமேசான் நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜெஃப் பெசோஸ் 34.8 பில்லியன் டார்களோடு உலகளவில் 15 ஆம் இடத்தில் இருக்கிறார்.

மார்க் சூக்கர்பர்க்

பேஸ்புக் நிறுவனத்தை நிறுவிய மார்க் சூக்கர்பர்க் 33.4 பில்லியன் டாலர்களோடு உலகளவில் 16 ஆவது இடத்தில் இருக்கிறார்.

லேர்ரி பேஜ்

கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனரான லேர்ரி பேஜ் 29.7 பில்லியன் டாலர்களோடு உலகளவில் 19 ஆம் இடத்தில் இருக்கிறார்.

செர்ஜி ப்ரின்

கூகுள் நிறுவனத்தின் ப்ரெத்யேக திட்டஙஅகளுக்கான தலைவர் மற்றும் இணை நிறுவனரான ப்ரின் 29.2 பில்லியன் டாலர்களோடு 20வது இடத்தில் இருக்கிறார்.

ஸ்டீவ் பால்மர்

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான ஸ்டீவ் 21.5 பில்லியன் டாலர்களோடு 35 இடம் பிடித்திருக்கிறார்.

லாரென் பாவெல் ஜாப்ஸ்

எமர்ஸன் நிறுவனத்தின் நிறுவனரான ஜாப்ஸ் 19.5 பில்லியன் டாலர்களை கொண்டு உலகளவில் 45 இடம் பிடித்துள்ளார்.

மைக்கேல் டெல்

டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மைக்கேல் டெல் 19.2 பில்லியன் டாலர்களோடு 47 ஆம் இடத்தில் இருக்கிறார்.

Post a Comment

0 Comments