Subscribe Us

அரசாங்கத்துக்கும் எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை: அனுரகுமார


100 நாள் திட்டத்தின் மூலம் சிறப்பான அரசியல் சாசனத்திருத்தங்களை முன்னெடுக்க மக்கள் விடுதலை முன்னணி தொடர்ந்தும் முயற்சிக்கும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு இடம்பெற்ற நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இக்கருத்தை வெளியிட்டார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், அரசாங்கத்துக்கும் எங்களுக்கும் எவ்வித பொறுப்புக்களோ அல்லது தொடர்புகளோ கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தின் பங்காளி கட்சி நாங்கள்  அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் அரசியல் சாசனத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு எமது கட்சிக்கு காணப்படுகின்றது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments