உடல் நலக் குறைவு காரணமாக ஊடகப் பேச்சாளர் பதவியிலிருந்து விலகியதாக எஸ்எஸ்பி அஜித் ரோஹன கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரும், சட்டத்தரணியுமான அஜித் ரோஹன நீண்ட காலமாக பொலிஸ் ஊடகப் பேச்சாளராக கடமையாற்றி வந்தார்.
அண்மையில் அஜித் ரோஹன கொழும்பு பிரதேசத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
அஜித் ரோஹனவின் இடத்திற்கு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரும், சட்டத்தரணியுமான ருவான் குணசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
உடல் நலக் குறைவு காரணமாக சுய விருப்பின் அடிப்படையில் பேச்சாளர் பதவியிலிருந்து விலகிக் கொண்டதாக அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
0 Comments