ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சந்திக்க உள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
இன்று மாலை 5.00 மணிக்கு இந்த சந்திப்பு கொழும்பில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்நோக்குவது என்பது குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன் ஆயத்த நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பின் விரிவாக ஆராயப்படும் என கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, நாளை எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா, எதிர்க்கட்சி உறுப்பினர்களை சந்திக்க உள்ளார்.
நாடாளுமன்றில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நாளை முற்பகல் 11.00 மணியளவில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

0 Comments