Subscribe Us

முசலி இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான வீதி விபத்து விழிப்புணர்வு செயலமர்வு.



வடக்கு மாகாணசபையின் சுகாதார அமைச்சினால் வீதி விபத்துக்களை தவிர்க்கும் விழிப்புணர்வு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இவ்வார காலப்பகுதியில் (மார்ச் 2- மார்ச் 6) யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட சமுதாய மற்றும் குடும்ப மருத்துவத்துறையினரால் 34 ஆம் அணி மருத்துவ மாணவர்களை ஈடுபடுத்தி வட மாகாணம் முழுவதும் பாடசாலைகளில் விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் நிகழ்வுகள் நடாத்தப்பட்டுவருகின்றன.

முசலி இளைஞர் ஒன்றியத்தின் அனுசரணையுடன் மன்னார் வட்டத்துக்கான முசலி,நானாட்டான், மடு ஆகிய கல்விக்கோட்ட பாடசாலைகளை உள்ளடக்கி மன்/முருங்கன் மகா வித்தியாலயத்தில் இச் செயலமர்வு நடைபெற்றது.

இங்கு சமுதாய மருத்துவத்துரையினரின் செயற்பாடுகளுக்கு நன்றி தெரிவித்த பாடசாலை சமூகம், முசலி இளைஞர் ஒன்றியத்திற்கு நன்றி தெரிவித்ததோடு, தொடர்ச்சியான இதுபோன்ற விழிப்புணர்வு செயற்பாடுகளை மாணவர்களுக்கு கிடைக்க செய்வதற்கான வேண்டுதலும் விடுக்கப்பட்டது.
இந் நிகழ்விலே, மாணவர்களுக்கான விழிப்புணர்வு தகவல்களை மருத்துவ மாணவர்களும் வீதி போக்குவரத்து விதிகள் சம்பந்தமாக முருங்கன் போக்குவரத்து பொலிஸ் பிரிவினரும் வழங்கினர். தொடர்ந்து இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தினரின் முதலுதவிப்பயிற்சியும் வழங்கபட்டது. 
மேலும் மருத்துவ மாணவர்களால் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்வுகளுக்கான பரிசளிப்பு நிகழ்வும் நடைபெற்றது.-Munas Arafath-




Post a Comment

0 Comments