Subscribe Us

இளம் கலைஞர்களின் சமூகப் பணி விசாலமானது - கலாநிதி நவீந்திர தி சொய்சா



இக் குறிப்பின் ஊடாக இளம் கலைஞர்களுடன் நேரடியாக பேசுகின்றேன். உங்களிடம் குடிகொண்டுள்ள, சமூகப் பணியாற்றும் தூய்மையான நோக்கம், மிகத் தெளிவாகத் தெரிகின்றது. எனினும் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள பின்பற்றிய செயற்பாடுகள் போதுமானதும் பொருத்தமானதும் அல்ல என்பது எனது கருத்தாகும். அதுபோல, தமது முயற்சி வெற்றிபெற்றது என்றோ புதிய யுகத்திற்கான ஆரம்பத்தை வழங்க பங்களிப்பு செய்தோம் என்றோ நீங்கள் திருப்தியடைவும் முடியாது.

உண்மையில் நடைபெற்று முடிந்துள்ளவை நீங்களும் உங்கள் இரசிகர்களில் பெரும்பான்மையினரும் எதிர்பார்த்த சமூக அரசியலினதும் பொருளாதார மறுசீரமைப்புக்களினதும் நிறைவு அல்ல. அம் மாற்றத்திற்குத் தேவையாகியிருந்த மிகச் சிறிய திருப்பு முனையொன்றைக் கடந்து வந்தது மட்டும்தான்.

தேர்தலின் பின்னர் அரசியல்வாகதிகளையும் அவர்களைச் சூழ்ந்துகொண்டிருக்கும் உங்கள் இரசிகர்களின் நடத்தையையும் ஒருமுறை பாருங்கள். உண்மையில் நாம் 21-ம் நூறாண்டில்தான் வாழுகின்றோமா என்ற சந்தேகம் வருகின்றது. 70 வருடங்களாக அனைவருக்கும் இலவச கல்வி கிடைத்திருந்தாலும் எழுத்தறிவு வீதம் உச்ச மட்டத்தை எட்டியுள்ளதாக புள்ளிவிவரங்கள் காட்டினாலும் சுயமாக சிந்திக்கக் கூடிய சரியான தீர்மானங்களை எடுக்கக் கூடிய மனிதர்கள் நமது சமூகத்தில் மிக மிகக் குறைவு என்பது புலனாகும்.

நிலபிரபுத்துவ அடிமை யுகத்திற்கு ஒத்த இன்றைய அரசியல் அதிகாரமுறையானது, அரசியல் தலைமைத்துவம் என்பது பரம்பரைச் சொத்தாகக் கைமாற்றப்படுவதைக் கூட மாற்றிக்கொள்ளும் ஆற்றலைப் பெறவில்லை. குடும்ப பின்னணிக்கு வெளியே அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டவர்களில் அதி பெரும்பான்மையினர் கல்வியறிவில்லாத, தீவிரவாத செயல்களிலும் சட்ட விரோத செயல்களிலும் ஈடுபடுபவர்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது.

படித்தவர்கள் அரசியலுக்கு வருவதைக் காண முடியாது உள்ளது. இவற்றுக்கு மேலதிகமாக ஆட்சியாளன் எப்பொழுதும் ஆட்சியாளன்தான் என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். எல்லா இடத்திலும் எல்லா சந்தர்ப்பங்களிலும் நடைபெறும் அரசியல் சூழ்ச்சிகளினால் ஏற்படும் பாதிப்பை குறைத்துக்கொள்வதற்கு நாம் அறிவைப் பெற்றிருக்க வேண்டும்.

அதற்கு ஏற்ப புதிய தலைமுறையின் அனைத்து கலைஞர்களும் எமது வருங்கால தலைமுறையை கூர்மையான இரசனை மிக்கவர்களாக்குவதும் அதன் ஊடாக புத்தியுள்ள, நேர்மையான, ஒழுக்கமுள்ள சுயமாக சிந்திக்கக் கூடிய இரசிகர்களாக மாற்றுவதற்கும் பாரிய பொறுப்பொன்று சுமத்தப்பட்டுள்ளது.

இனி நீங்கள் மக்களை அணி திரட்டி தயார்படுத்த வேண்டியது இன்னும் சில மாதங்களில் நடைபெறவிருக்கும் தேர்தலுக்காக அல்ல, இன்னும் பல வருடங்களாக நடைபெறவுள்ள தேர்தல்களுக்கு ஆகும்.

நன்றி -TPT-

Post a Comment

0 Comments