நடப்பு உலகக் கிண்ண போட்டித்தொடரில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. உலகக் கிண்ண வரலாற்றில் இதுவரை 24 சதங்கள் அடிக்கப்பட்டதே சாதனையாக இருந்தது.
ஆனால் நடப்பு உலகக் கிண்ண லீக் போட்டிகள் முடிவடைவதற்குள் அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1975ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் வெறும் 6 சதங்களே அடிக்கப்பட்டன. கடைசியாக 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் 24 சதங்கள் அடிக்கப்பட்டிருந்தன.
நடப்பு உலகக் கிண்ணத் தொடரில் சங்கக்கார நேற்று முன்தினம் பெற்ற சதம் 25ஆவது சதமாகும். இது உலகக் கிண்ணத் தொடரில் புதிய சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
மெக்ஸ்வெல்லையும் சேர்த்து இந்த உலகக்கிண் ணத்தில் 5-ஆவது வரிசை துடுப்பாட்ட வீரர்கள் மட்டும் 5 சதங்கள் அடித்திருக் கிறார்கள். டேவிட் மில்லர் (தென்னாபிரிக்கா), மஹேல ஜெயவர்தன (இலங்கை), டிவில்லியர்ஸ் (தென்னா பிரிக்கா), பிரன்டன் டெய்லர் (சிம்பாப்வே) ஆகியோர் 5-ஆவது வரிசை ஆட்டக்காரராக இறங்கி சதம் அடித்த மற்ற நால்வர் ஆவர். 5-ஆவது வரிசை வீரர்கள் அதிக சதங்கள் பெற்ற உலகக் கிண்ணம் இது தான்.
இதற்கு முன்பு 1996-ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் இந்த வகையில் 2 சதங்கள் (இந்தியாவின் வினோத் காம்ப்ளி மற்றும் நியூசிலாந்தின் கிறிஸ் ஹாரிஸ்) அடிக்கப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது.


0 Comments