Subscribe Us

சிவனொலிபாத மலைக்குச் சென்ற சிங்கப்பூர் பிரஜை திடீர் மரணம்


சிவனொலிபாத மலைக்கு சுற்றுலாச் சென்ற சிங்கப்புர் பிரஜை ஒருவர் நேற்று திங்கட்கிழமை இரவு திடீரென மரணமடைந்துள்ளதாக நல்லதண்ணி காவல்துறையினர் தெரிவித்தனர்.
 
55 வயதுடைய டொன் ஏன் என்ற நபரே இவ்வாறு மரணமடைந்திருப்பதாகவும், தற்போது அவருடைய சடலம் பிரேத பரிசோதனைக்காக மஸ்கெலியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நல்லதண்ணி காவல்நிலைய பொறுப்பதிகாரி அணில் ஜயசிங்க தெரிவித்தார்.
 
சிங்கப்புர் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சிலர் சிவனொலிபாத மலைக்கு நேற்று மாலை 6 மணியளவில் விஜயம் செய்திருந்த நிலையில் இந்திகட்டுப்பான என்ற இடத்தில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நல்லதண்ணி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments