Subscribe Us

header ads

உலகில் அதிகளவிலான கார்களைக் கொண்ட நாடு டுபாய்


உலகிலே மக்கள் தொகைக்கு ஏற்ப அதிகளவிலான கார்களை கொண்ட பெருநகரம் என்ற பெருமையை டுபாய் பெற்றுள்ளது.
 
கணக்கெடுப்பின்படி, அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் வாழும் ஆயிரம் பேருக்கு 305 கார்களும், இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள் ஆயிரம் பேருக்கு 213 கார்களும் சொந்தமாகவுள்ளது.
 
இந்த நிலையில், டுபாயில் வசிக்கும் மக்களில் சராசரியாக ஆயிரம் பேருக்கு சொந்தமாக 540 கார்கள் உள்ளன.
 
மொத்தம் 24 இலட்சம் மக்கள் தொகையை கொண்ட டுபாயில் 14 இலட்சம் கார்கள் உள்ளன குறிப்பிடத்தக்கது.
 
கடந்த எட்டு ஆண்டுகளில் கார்களின் பயன்பாடு இருமடங்கு அதிகரித்துள்ளது.
 
இந்த நிலை தொடர்ந்தால் எதிர்வரும் 2020ஆம் ஆண்டுக்குள் டுபாயில் கார்களின் எண்ணிக்கை 22 இலட்சமாக உயர்ந்துவிடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments