Subscribe Us

தொடரும் சங்ககாரவின் சாதனைகள்


ஒரு நாள் போட்டியில் தொடர்ச்சியாக 4 சதங்களை விளாசிய முதல் வீரரானார் குமார் சங்கக்கார. இன்று ஸ்கொட்லாந்துடனான போட்டியில் 86 பந்துகளைச் சந்தித்து சத்ததைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இது இவரது 25 ஆவது சதத்ததைப் பூர்த்தி செய்ததுடன் 124 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தா.  அத்துடன் டில்சானும் தனது 22 ஆவது சதத்ததைப் பூர்த்தி செய்ததுடன் 104 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். இலங்கை அணி சற்று முன்னர் வரை 8 விக்கெட்டுக்களை இழந்து 331 (46Ove) ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.

முன்னதாக உலகக்கிண்ண போட்டிகளில் தொடர்ச்சியாக 3 முறை சதமடித்தவர் என்ற சாதனையை அவுஸ்திரேலியாவுடனான போட்டியின் போது சங்கக்கார படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments