Subscribe Us

header ads

மத ஒற்றுமையை செயலில் காட்ட கோயில் கட்டும் இஸ்லாமிய தலைவர்


மத ஒற்றுமையை செயலில் காட்டும் முனைப்புடன் அஜ்மல் அலி ஷேக் எனும் இஸ்லாமியர், இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் மதுரா நகரில் இந்து கோயில் ஒன்றை கட்டி வருவதாக டெய்லி சிலோன் சென்னை நிருவர் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் மதுரா நகரில் உள்ள சஹார் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அஜ்மல் அலி ஷேக். மதுரா மாவட்டத்தில் உள்ள சஹார் கிராமத்தின் இஸ்லாமிய மதத் தலைவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயில் கட்டுமானத்திட்காக அவர் சுமார் ரூ. 4 லட்சத்தை தனது சொந்த பணத்திலிருந்து செலவிட்டுள்ளார்.
குறித்த கோயில் கட்டுமானத்தை முன்னிட்டு ஞாயிற்றுகிழமை சிவன் மற்றும் அனுமாருக்கான பூஜை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அஜ்மல் அலியின் பணிக்கு முன்னாள் உத்தரப் பிரதேச அமைச்சர் லட்சுமி நாராயண சவுதிரி பாராட்டுத் தெரிவித்துள்ளார். இந்த செயல் இரு மதத்தினரையும் ஒன்றிணைக்கும் நல்ல முயற்சி என்றும் தெரிவித்துள்ளார். அஜ்மல் அலியின் கோயில் கட்டும் பணிக்கு சஹார் கிராம மக்கள் உட்பட பல கிராம மக்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இவரது பணிக்கு அங்குள்ள இஸ்லாமியர்களும் வரவேற்பு அளித்து உதவி வருவதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
மத ஒருமைப்பாற்றை காட்டக்கூடிய பல முறைகள் காணப்படுகிற போதும், ஒரு மத தளத்தை உருவாக்குவதற்கு உதவி புரிவது தொடர்பில் முஸ்லிம் உலமாக்கள் பல வித்தியாசமான கருத்துக்களை கொண்டிருக்கும் அதேவேளை, இது தொடர்பில் ஆராந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிகின்றன

Post a Comment

0 Comments