Subscribe Us

இப்படியும் ஒரு இலங்கை ஜனாதிபதி.. இன்று ஒரு மணி நேரம் விமானத்துக்காக காத்திருந்த மைத்ரி

இன்று காலை 10:30 மணியளவில் பிரித்தானியா பயணமான இலங்கை ஜனாதிபதி மைதிரீபால சிரிசேன ஒரு மணி நேரமாக விமான நிலையத்தில் காத்திருந்திருந்தார். எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK651 சாதாரண பயணிகள் விமானத்தில் பிரித்தானியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணத்தை ஜனாதிபதி மேற்கொண்டார்.

ஜனாதிபதியுடன் அவருடைய மனைவி, சர்வதேச விவகாரங்களுக்கான ஜனாதிபதி ஆலோசகர் வைத்தியர் கிரிஸ் நோனிஸ் (முன்னாள் பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவர்) உட்பட 8 உத்தியோகத்தர்கள் இப் பயணத்தில் இணைந்துகொண்டனர்.

சாதாரண பயணிகள் ஒழுங்குக்கு அமைய ஒரு விமானம் புறப்படுவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னர் ஜனாதிபதி குழுவினர் விமான நிலையம் வந்துசேர்ந்தனர்.

இம் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது பிரித்தானியாவின் மகா இராணியின் பகல் உணவு விருந்துபசாரத்தில் கலந்துகொள்ளவுள்ளதுடன் பிரித்தானிய பிரதமரையும் சந்திக்கவுள்ளார். மேலும், பொது நலவாய மாநாட்டுத் தலைவர் என்ற வகையில் 09-ம் திகதி நடைபெறவுள்ள இளைஞர் அமர்விலும் உரையாற்றவுள்ளார்.

இவ் விஜயத்தின் மூலம் இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகள் பலமடையும் என நம்பிக்கை தெரிவிக்கப்படுகின்றது.

மூலம்: ලංකාදීප லங்காதீப

படம் : அடையாளத்துக்காக இணைக்கப்பட்டது.

-Hisham Px -

Post a Comment

0 Comments