யாழ் முஸ்லிம்கள் வரலாற்றுப் பார்வை நூல் வெளியீடு விழா 8ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 09மணிக்கு தெஹிவளை ஜயசிங்க மண்பத்தில் நடைபெறவுள்ளது.
யாழ்பாணம் முஸ்லீம் மறுமலர்ச்சி சங்கம் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வில் அமைச்சர்களான றிசாத் பதியுத்தீன், புனர்வாழ்வு மீள்குடியேற்ற ஹிந்து விவகார அமைச்சர் சுவமிநாதன் ஆகியோர்கள் கௌரவ அதிதிகளாக கலந்து கொள்கின்றனர்.
இந்நிகழ்வில் விசேட அதிதியாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷேக் றிஸ்வி முப்தி கலந்து கொள்வதோடு ஜாமியா நளீமியா பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம் சுக்ரி முக்கிய உரையாற்றுவார். நூல் விமர்சனத்தை பேராசிரியர் எம்.எஸ். ஆனஸ் நிகழ்த்துவார் என யாழ் அசீம், யாழ் றகீம் ஆகியோர் தெரிவித்தனர்.
- அஷ்ரப் ஏ சமத்


0 Comments