அரசியல் செல்வாக்கை வளர்த்து கொள்வதற்காக மக்கள் சொத்துக்களை அழித்து நாடகமாடிய யுகம் முடிவுக்கு வந்து விட்டது என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இலங்கை வங்கியின் அனுசரணையில் லுணுகம்வெஹேர பிரதேச செயலக பிரிவில் 180 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபா மானிய கடனுதவியை வழங்கும் நிகழ்வில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கடந்த ஆட்சிக்காலத்தில் நாட்டின் வறிய மக்கள் சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்தனர். வறிய மக்களுக்கு துன்பங்கள் விளைவிக்கப்பட்டன.
100 நாள் வேலைத்திட்டத்தின் அபிவிருத்திக்கு அமைய மக்களின் பணப் பையை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். உண்மையான மக்கள் சேவைக்காக புதிய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் எனவும் அமைச்சர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments