Subscribe Us

header ads

கொத்திக்கும் எண்ணெயில் தியானம் செய்த புத்த துறவி (வீடியோ)


தாய்லாந்தின்  லம்பு மாகாணத்தை சேர்ந்த புத்த துறவி நாங் புவா இவர் அந்த பகுதியில் மிக சக்தி வாய்ந்த துறவியாக கருதப்படுகிறார். இவர் தனது கைகளால் தொடும் பொருட்கள் அனைத்து சக்தி வாய்ந்தவையாக மாறுகின்றன என நம்பப்படுகிறது  அவைகள் அதிக விலைக்கும் விற்கப்படுகிறது.

இவர் தொடும் பொருட்களில் இவரின் சக்தி ஊடுருவதாக அந்த பகுதி மக்கள் நம்புகிறார்கள். அதனால் அவரை பின்பற்றுபவர்கள் தாயதுக்கள் அல்லது துணி துண்டுகளை அவரின் கைபட்டு எடுத்து செல்கிறார்கள்.

இந்த நிலையில் நாங் புவா சில நாட்களுக்கு முன் கொதிக்கும் எண்ணெயில் உட்கார்த்து தியானம் செய்த காட்சி வீடியோவாக எடுக்கபட்டு யூடியூப்பில் பகிரபட்டது. அது குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்தன. எரியும் தீயில் ஒரு பெரிய பாத்திரம் வைத்து அதில் முழுவதும்  எண்ணெய் நிரபபட்டு இருந்தது அதில் துறவி உடகார்ந்து இருந்தார். அடிபகுதியில் தீ நன்கு கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருந்தது

ஆனால், இது சாத்தியமில்லை என்றும் ஏதோ தந்திர வேலை என்றும் அறிவியலாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

Post a Comment

0 Comments