Subscribe Us

header ads

யாழில் காலடி வைக்க வேண்டும் என்பதற்காகவே வந்தேன்: மோடி


இந்­தியப் பிர­த­ம­ராக நான் இருப்­ப­துடன் யாழ்ப்­பா­ணத்­திற்கு முதற்றட­வை­யாக வந்­த­தை­யிட்டு முதலில் மகிழ்ச்­சி­ய­டை­கின் றேன். நான் இங்கு வந்­தது வேறெந்த கார­ணத்­துக்­கா­கவும் அல்ல. யாழ்ப்­பா­ணத்தில் காலடி வைக்க வேண்டும் என்­ப­தற்­கா­கவே ஆகும். யாழ்ப்­பாணம் ஓர் புதிய அடை­யா­ளத்தை காட்டி நிற்­கின்­றது. யாழ்ப்­பா­ணத்தின் இன்­றைய நிகழ்வின் மூலம் உல­கிற்கு புதி­யதோர் வாச­னையை அது தரக்­கூ­டி­ய­தாக அமைந்­துள்­ளது. இந்த நிகழ்வு எனக்கு புதிய உணர்­வையும் சிந்­த­னை­யையும் தரு­வ­துடன் மன­துக்கு திருப்­தி­யையும் சகோ­தரத் தன்­மை­யையும் ஏற்­ப­டுத்­து­வ­தாக அமைந்­துள்­ளது என்று இந்­தியப் பிர­தமர் நரேந்­தி­ர­மோடி தெரி­வித்தார்.
நேற்று யாழ்.நூல­கத்தில் யாழ்ப்­பாண கலா­சார நிலை­யத்­திற்­கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.
நான் யாழ்ப்­பா­ணத்­திற்கு வந்­து­போது வித்­தி­யா­ச­மான உணர்வை அடைந்தேன். நான் வேறு எதற்­கா­கவும் இங்கு வர­வில்லை. யாழ்ப்­பா­ணத்தில் காலடி எடுத்து வைக்­க­வேண்டும் என்­ப­தற்­கா­கவே இங்கு வந்தேன். இந் நிகழ்வு மிகுந்த மனத் திருப்­தியை அளிக்­கின்­றது. இலங்­கைக்கும் இந்­தி­யா­விற்கும் பௌதீ­க­மான தொடர்­புகள் மாத்­தி­ர­மன்றி கலா­சார ரீதி­யான விட­யங்­களும் ஒன்­று­பட்­டுள்­ளன. நான் யாழ்ப்­பா­ணத்தில் கலா­சார மண்­ட­பத்­திற்­கான நிர்­மா­ணப்­ப­ணி­களை ஆரம்­பித்து வைப்­பதில் மகிழ்ச்சி அடை­கின்றேன். யாழ்ப்­பா­ணத்தில் நிர்­மா­ணிக்­கப்­படும் கலா­சார நிலையம் மிகவும் புரா­தன நுட்பம் வாய்ந்­த­துடன் கலா­சார விட­யங்­களை அடை­யா­ளப்­ப­டுத்­தப்­போ­கின்­றது. இது உலகின் மிகவும் தரம் வாய்ந்த ஒன்­றாக அமை­யப்­போ­கின்­றது.

Post a Comment

0 Comments