ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று சனிக்கிழமை பிரிட் டன் பயணமாகின்றார். பிரிட்டனின் எலிசபெத் மகாராணியின் அழைப்பிற்கமையவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரிட்டன் நோக்கி பயணிக்கின்றார் பிரிட்டன் செல்லும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுநலவாய அமைப்பின் அமர்வில் எதிர்வரும் திங்கட்கிழமை கலந்துகொள்ளவுள்ளார். எலிசபத் மகாராணியாரும் கலந்துகொள்ளவுள்ள இந்த அமர்வில் பொதுநலவாய அமைபபின் தற்போதைய தலைவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரி்பால பங்கேற்கின்றார்.
ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் இரண்டாவது வெளிநாட்டு விஜயத்தை மேற்கொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை லண்டன் விமான நிலையத்தில் வரவேற்பதற்கு பிரிட்டன் அரசாங்கத்தினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் குறித்த விஜயத்தில் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர, மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன், வெளியுறவு அமைச்சின் செயலாளர் சித்ராங்கனி, ஜனாதிபதி செயலாளர் பி.பி அபேகோன் உட்பட 20 அதிகாரிகள் இடம்பெறுகின்றனர்.
இதன்போது வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் வெளியுறவு இராஜாங்க அமைச்சர் ஹியுகோ ஸ்வயர் உள்ளிட்ட தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.


0 Comments