-நஜீப் பின் கபூர்-
தற்போது ஜெனிவாவில் போய் ராஜபக்ஷக்களுக்கு எதிராக நீங்கள் வாக்குமூலம் கொடுக்கின்றீர்கள். என்றோ செய்ய வேண்டிய வேலையைக் காலங் கடந்து நீங்கள் செய்ய முயன்றிருப்பதும் மதிக்கப்பட வேண்டிய விவகாரம் என்று ஏற்றுக் கொள்கின்றோம்.
என்றாலும் இது முற்றிலும் ஒரு அரசியல் காய்நகர்த்தல் - நாடகம் தேர்தல் பிரச்சாரம் என்பது அனைவருக்கும் புரிகின்றது. நாம் ஏன் இப்படிச் சொல்கின்றோம் என்றால் இதே ஜெனிவாவில் முஸ்லிம்களுக்கு பொதுபல சேன நெருக்கடி கொடுத்துக் கொண்டிருந்த காலத்தில் - நேரத்தில் அன்று மு.கா.தலைவர் போய் மஹிந்த ராஜபக்ஷவுக்கு விசுவாசம் தெரிவித்துக் காரியம் பார்த்தது என்ன நியதியின் அடிப்படையில் என்று கேட்கத் தோன்றுகின்றது.
ராஜபக்ஷவைப் பாதுகாக்க ரவூப் ஹக்கீம் அன்று ஆஜராகி, இன்று முஸ்லிம்களுக்கு அன்று ராஜபக்ஷ துரோகம் செய்தார் என்று வாக்கு மூலம் கொடுக்க மு.கா. தலைவருக்கு ஒரு நிசாம் காரியப்பர் தேவைப்பட்டிருக்கின்றார். நீங்கள் ஜெனீவாவில் வாக்குமூலம் கொடுப்பதை விட மு.கா. தலைவர் போய்க் கொடுத்திருந்தால்தானே கணதியாக இருக்கும்.
நிச்சயமாக நாம் ஒரு குறிப்பை நிசாம் காரியப்பர் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம். ராஜபக்ஷ சில வேலை மீண்டும் அரசியல் ஆதிக்கத்தைக் கைப்பற்றினால் மு.கா. தலைவர் எனக்குத் தெரியாமல் ஜெனீவாவில் போய் நிசாம் உங்களுக்கு எதிராக வாக்கு மூலம் கொடுத்தார் என்று போட்டுக் கொடுப்பதற்கும் நிறையவே வய்ப்புக்கள் இருக்கின்றது என்பதனையும் சொல்லி வைக்க விரும்புகின்றோம். உங்கள் விடயத்pல் தலைவர் மிகவும் அவதானமாகத்தான் காரியம்பார் என்பது தெரிந்த விடயம்தானே!
ஒரு சந்தர்ப்பத்தில் ராஜபக்ஷ எவ்வளவு நல்லவர் என்று சொல்லும் இதே தலைவர், ராஜபக்ஷ எவ்வளவு மோசமானவர் நாம் பிழையான முடிவைக் கட்சியைப் பாதுகாப்பதற்காக எடுக்க வேண்டி இருந்தது என்று பேசுகின்றவர் என்பதால் இந்தக் குறிப்பு உங்களுக்கு.!

0 Comments