Subscribe Us

சிம்ஸ் கெம்பஸ் கல்வி நிறுவனத்தின் வருடாந்த விளையாட்டு போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வுகளும் பரிசளிப்பு விழாவும்

சிம்ஸ் கெம்பஸ் கல்வி நிறுவனத்தின் வருடாந்த விளையாட்டு போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வுகளும் பரிசளிப்பு விழாவும் நேற்று வியாழக்கிழமை சாய்ந்தமருது பொலிவேரியன் மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
இதன்போது சிம்ஸ் கெம்பஸ் நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் பங்குபற்றினர். கிரிக்கட், வலைப்பந்து உட்பட பல்வேறு போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
பரிசளிப்பு நிகழ்வில் சிம்ஸ் கெம்பஸ் கல்வி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும் வர்த்தக,வாணிப அமைச்சின் ஆலோசகருமான ஜனாப்.அன்வர் எம்.முஸ்தபா பிரதம அதீதியாக கலந்து சிறப்பித்தார்.
அத்துடன் சிம்ஸ் கெம்பஸ் கல்வி நிறுவனத்தின் கல்முனை பிராந்திய முகாமையாளர் உம்மு சப்ரியா அஸீஸ் , தென்கிழக்கு பல்கலைக்கழக கணக்காய்வு உதவியாளர் கலீல் எஸ்.முஹம்மது, ஆசிரியர் எம்.எம்.ஷஹ்பி, சிம்ஸ் கெம்பஸ் விரிவுரையாளர் முஹம்மது முஸ்தபா முபாரக் ஆகியோருடன்,மேலும் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..
இதன்போது வெற்றி பெற்ற வீரர்களுக்கு சம்பியன் கிண்ணம் மற்றும் பரிசுகள் அதிதிகளினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது,
செய்தியும்,படமும்-கலைமகன்






Post a Comment

0 Comments