Subscribe Us

குர் ஆனை எரித்த பெண்ணொருவர் அடித்துக் கொலை

இஸ்லாமியர்களின் புனித நூலான குர் ஆனை எரித்ததாகக் கூறப்படும் பெண்ணொருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் பொதுமக்கள் குறித்த பெண்ணை தாக்கும் காணொளி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் ஆப்கானிஸ்தானிலேயே இடம்பெற்றுள்ளது. 27 வயதான பர்குந்தா என்ற பெண்ணொருவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.
கல் மற்றும் பொல்லுகளால் தாக்கியது மட்டுமன்றி பின்னர் அவரை எரித்துமுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை கொல்லப்பட்ட தமது மகள் மனநிலை குன்றியவர் என அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் சிலரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
kuran1
kuran12
kuran13


Post a Comment

0 Comments