Subscribe Us

சீனாவின் முதல் உயிரி எரிபொருள் விமானம் இன்று தனது பயணத்தை தொடங்கியது


சீனாவின் முதல் உயிரி எரிபொருள் (Bio Fuel) விமானம் இன்று வெற்றிகரமாக தனது பயணத்தை தொடங்கியது. சீனாவின் சுற்றுப்புற சூழலை  தூய்மையாக வைப்பதற்காக அந்நாட்டு அரசு சமையல் எண்ணெய் (Cooking Oil) மூலம் விமானத்தை இயக்க முடிவு செய்துள்ளது. 

இதனையடுத்து, நச்சுக்களை வெளியிடாத கழிவு சமையல் எண்ணெய் மூலம் ஓடும் முதல் விமானம் இன்று வெற்றிகரமாக பறந்தது.

ஹெனைன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான அந்த விமானம் சீனாவின் வர்த்தக மையங்களான ஷாங்காய்க்கும், பெய்ஜிங்கிற்கும் இடையே பறக்கத்  தொடங்கியது. சீன தேசிய விமான எரிபொருள் மற்றும் எரிசக்தி நிறுவனமான சினாபெக் நிறுவனம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இதற்கான சமையல் எண்ணெய் கழிவுகள் சீன உணவகங்களில் இருந்து பெறப்படுகிறது. பெறப்படும் சமையல் எண்ணெய் போயிங் 737(Boeing 737)  விமானங்களில் 50-50 என்ற அளவில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, 50 சதவீத அளவு ஜெட் எரிபொருளும், 50 சதவீத அளவு சமையல் எண்ணெய்யையும்  சேர்ந்து இந்த உயிரி எரிபொருள் உபயோகிக்கப்படுகிறது.

உலகின் முதல் உயிரி எரிபொருள் விமானம் 2012ம் ஆண்டு கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. போயிங்  விமானங்களுக்கு சீனா முக்கிய வர்த்தக சந்தையாக விளங்குவதால், வரும் 2033ம் ஆண்டுக்குள் 870 மில்லியன் டாலர் மதிப்பிலான 6,020 விமானங்கள் தேவைப்படுவதாக கூறப்படுகிறது.  

Post a Comment

0 Comments