கிழக்கின்
ஆட்சி மாற்றம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கிழக்கு
மாகான சபை உறுப்பினர்கள் குழு ஒன்று சற்று முன் தமிழ் தேசியக்கூட்டமைப்பின்
தலைவர் சம்பந்தன் அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது -
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
நம்பிக்கை துரோகம் செய்து ஏமாற்றியுள்ளதாக குற்றம் சாட்டும் அவர்கள் தமிழ்
தேசிய கூட்டமைப்புடன் இணைந்து கிழக்கில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சு
வார்த்தையில் ஈடுபட்டு வருவதாக நம்பகமாக தெரிவிக்கப்படுகிறது .
கிழக்கு மாகாண சபையின் முதல்
அமைச்சராக ஹாபிஸ் நசீர் அஹமத் நியமனம் செய்வதற்கு வழங்கிய ஆதரவை
மீளப்பெறுவதாக இன்று அறிவித்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின்
உறுப்பினர்களான உதுமாலெப்பை அடங்கிய 6 உறுப்பினர்களுடன் முன்னாள் கிழக்கின்
முதல் அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான் )உம் இந்த
சந்திப்பில்
கலந்து கொண்டுள்ளார்.
-செய்யித் அப்ஷல் -



0 Comments