அண்மையில் இந்திய கேரள சட்டப்பேரவையில் அமளி ஏற்பட்டது. அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிவதாசன் நாயரை எதிர்கட்சியை சேர்ந்த கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. ஜமிலா பிரகாசம் கடித்து விட்டார்.
இதுகுறித்து ஜமிலா பிரகாசம் எம்.எல்.ஏ. கூறும் போது சட்டப்பேரவையில் ஏற்பட்ட அமளியின் போது பின்னால் இருந்து எனது கையை பிடித்து இழுத்து கீழே தள்ளினார்கள். எனது இடுப்பிலும் கை வைத்தனர். எனது முதுகிலும் அடி விழுந்தது. நான் திரும்பி பார்த்தபோது, இதற்கு காரணம் சிவதாசன் எம்.எல்.ஏ. என்பதை அறிந்ததால் அவரை நான் கடித்தேன் என்று கூறியுள்ளார். என்னை காத்து கொள்ள நான் இவ்வாறு நடந்து கொண்டதில் தவறு ஒன்றும் இல்லை என்றும் கூறியுள்ளார்.


0 Comments