Subscribe Us

header ads

வடக்கு கிழக்கு மக்கள் குறித்து, பிழையாக கணித்துவிட்டேன் - மகிந்த

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் குறித்து தாம் தவறாக கணித்துவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

த ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 80 சதவீதமான வாக்குகள் தமக்கு எதிராக பயன்படுத்தப்பட்டிருந்தன. எனினும் இது இவ்வாறு நிகழும் என்று தாம் எதிர்பார்த்திருக்கவில்லை.

ஏன் இப்படி வாக்குகள் வீழ்ச்சி அடைந்தன என்பது தமக்கு புரியவில்லை.

மேலும் வடக்கு கிழக்கின் வாக்குகள் சரிவடைந்துள்ளது என்பது தெரிந்ததோடு, தாம் தேர்தலில் தோல்வி அடையப் போகிறோம் என்பதையும் உணர்ந்துக் கொண்டதாக மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments