Subscribe Us

header ads

ஐஎஸ் பொறிக்குள் இலங்கை முஸ்லிம்கள் சிக்க மாட்டார்கள்! சரத் பொன்சேகா



இந்தியாவும், பாகிஸ்தானும் காஷ்மீர் பிரச்சினையை விரைவில் தீர்க்க வேண்டும் என்று இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார். 

இந்தியாவின் ஜெய்ப்பூர் நகரில் நடைபெறும் சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

இந்தியாவும், பாகிஸ்தானும் தவறான அபிப்பிராயத்தையும், சந்தேகங்களையும் கைவிட்டு, காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வை காண வேண்டும். இதன்மூலம் சர்வதேச விடயங்களை இரண்டு நாடுகளுக்கும் கவனிக்க முடியும். இரண்டு நாடுகளும் அயலவர் என்ற அடிப்படையில் செயல்பட வேண்டும் என அவர் இங்கு மேலும் கூறியுள்ளார். 

இதேவேளை இலங்கை முஸ்லிம்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் பொறிக்குள் சிக்க மாட்டார்கள் எனவும் பொன்சேகா நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 

குறிப்பிட்ட அமைப்பு ஏனைய எந்த அமைப்பினையும்போல தன்னை விரிவுபடுத்தி உலகின் பல பகுதிகளிலும் காலூன்ற முயற்சிகளை மேற்கொள்ளும். எனினும் இலங்கை முஸ்லிம்கள் ஏனைய சமூகத்தவர்களுடன் சமாதான சமவாழ்வை வாழ்கின்றனர், அவர்கள் இவ்வாறான நிலைமை இலங்கையில் தோன்றுவதை விரும்புவார்கள் என நான் கருதவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

Post a Comment

0 Comments