பிரான்சில் வீடு ஒன்றின் குளிர்சாதனப் பெட்டியில் 5 பச்சிளம் குழந்தைகளின் உடல்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சின் தென்மேற்கு பகுதியில் உள்ள போர்டாக்ஸ்(Bordeaux) நகரில் வசித்து வரும் நபர்(40) ஒருவர், தன் வீட்டில் உள்ள குளிர்பானங்கள் வைக்கும் குளிர்சாதன பெட்டியின் பிரிசரை(Freezer) திறந்துள்ளார்.
அப்போது அதில் ஒரு பையில் பிறந்த குழந்தையின் உடல் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் அவரது வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர்.
இந்த சோதனையில் அந்த ப்ரீசரில், மேலும் 4 பச்சிளம் குழந்தைகளின் உடல்கள் இருந்ததை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.
இந்நிலையில் பொலிசார் சோதனை நடந்தபோது வீட்டில் புகார் அளித்த நபர், அவரின் மனைவி(35) மற்றும் இரண்டு மகள்கள் ஆகியோர் இருந்துள்ளனர்.
இதன்பின் அந்நபரின் மனைவி மீது சந்தேகமடைந்த பொலிசார், பரிசோதனைக்காக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் இவர் கடந்த 17ம் திகதி குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளது உறுதியாகியுள்ளது. மேலும் அவரே தன் குழந்தைகளை பிரீசரில் மறைத்து வைத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆனால் தன் மனைவியின் 5 கர்ப்பங்கள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று கணவர் பரிதாபமாக தெரிவித்துள்ளார்.

0 Comments