-நஜீப் பின் கபூர்-
225 பாராளுமன்ற உறுப்புரிமை 135 ஆக அதிகரிக்கின்றது
தற்போது நமது பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225. வருகின்ற பொதுத் தேர்தலில் இந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை மேலும் 10 அதிகரித்து 235 என்று மாற்றம் செய்யப்பட இருக்கின்றது. வருகின்ற பொதுத் தேர்தல் தினேஷ் குனவர்தனவின் சீர்திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு திருத்தப்பட்டாலும் அதிலும் சில மாற்றங்கள் செய்யப்பட இருக்கின்றது.
எப்படியும் வருகின்ற 4ம் திகதிக்கு முன்னர் தனக்கு இந்த மாற்றங்களை செய்து கொடுக்க முடியும் என்று தேர்தல் ஆணையாளர் ஜனாதிபதியிடத்தில் தெரிவித்திருக்கின்றார். அதனை நில அளவைத்திணைக்கள அதிகாரிகளும் இதனை ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.
பொது மக்களின் ஒப்புதல்களுக்கு உடனடியாகத் திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டு தேவையான மாற்றங்களுடன் எப்படியும் இரு மாதங்களுக்குள் புதிய முறை அமுலுக்கு வர அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றது. அதன்படி 175 தொகுதி அடிப்படையிலும் 40 விகிதாசாரமுறையிலும், புத்தி ஜீவிகள் என்று 15 உறுப்பினர்கள். மற்றும் வெற்றிபெறும் கட்சிக்கு போனஸ் ஆசனம் என்று 5 உறுப்பினர் என்றும் இது அமைய இருக்கின்றது என்று எமக்குத் தகவல் கிடைத்திருக்கின்றது.
சந்திரிகா - மைத்திரி சந்திப்பு
அண்மையில் வெளிநாட்டிலிருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக நாடு திரும்பி இருக்கின்றார். ராஜபக்ஷ போன்ற ஒரு ஊழல் பேர்வழியுடன் தனக்கு சமமான பதவியை சுதந்திரக் கட்சி வழங்கிய விடயத்தில் தனது அதிருப்த்தியைத் தெரிவித்து கட்சிக் கூட்டங்களில் கலந்து கொள்வதை சந்திரிகா நிராகரித்து வரும் நிலையில் அண்மையில் சுதந்திரக் கட்சி மத்திய குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரி சந்திரிக்க பண்டாரநாயக்க குமாரணதுங்ஹவை அவருடைய இருப்பிடத்திற்குச் சென்று ஜனாதிபதி மைத்திரி கலந்து பேசி இருக்கின்றார்.
அத்துடன் கட்சி யாப்பு புனரமைப்புக் குழுவின் தலைவராகவும் தற்போது சுதந்திரக் கட்சி சந்திரிக்காவை நியமனம் செய்திருக்கின்றது. மேலும் வருகின்ற தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்கும் அமைப்பாளர்களை நியமிக்கின்ற நடவடிக்கைகளுக்கும் என மூவர் அடங்கிய குழுவொன்றை ஜனாதிபதி மைத்திரி நியமித்திருக்கின்றார். நிமல் சிரிபால டி சில்வா, ஜோன் செனவிரத்ன, சுசில் பிரேமஜயந் ஆகியோர் இதில் அடங்கு கின்றார்கள்.
மஹிந்த விசுவாசிகளின் கண்டிக் கூட்டத்தில் 7000பேர்
தற்போது நாட்டில் பராபரப்பாகப் பேசப்படுகின்ற அரசியல் இசுவாக ராஜபக்ஷவுக்கு விசுவாசம் தெரிவித்து நடாத்தப்படுகின்ற கூட்டங்கள் இருந்து வருகின்றது.
கடந்த வெள்ளிக் கிழமை கண்டியில் நடந்த கூட்டத்திற்கு எட்டு இலட்சம் பேர் வரை கலந்து கொள்வார்கள். பல சுதந்திரக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களும் இதில் பங்கு கொள்வார்கள் என்று ஏற்பாட்டாளர்கள் வியாழக்கிழமை பத்திரிகையாளர் கூட்டம் போட்டு கண்டியில் அறிவித்தார்கள்.
இலங்கை அரசியல் வரலாற்றில் இதுவரைக்கும் எட்டு இலட்சம் பேர் கலந்து கொண்ட ஒரு அரசியல் கூட்டம் இந்த நாட்டில் நடந்ததில்லை. எமக்குத் தெரிந்த கணக்குப் படி அண்மையில் பாப்பாண்டவர் இங்கு வந்த போது அவரின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ள வந்த மக்கள் கூட்டமே மிகப் பெரிய கூட்டமாக இருக்க வேண்டும். அதில் கூட 3 இலட்சம் பேர் வரையே கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பற்றிய கணக்கைச் சொல்கின்ற போது எப்போதும் அரசியல் கட்சிகள் ஒன்றை நூறாக்கியே கணக்குச் சொல்கின்றன. எனவே இப்படிக் கணக்குச் சொல்கின்றவர்களுக்கும் அதனை வைத்து செய்தி கொடுப்பவர்களுக்கும் நாம் ஒரு புதிய சூத்திரத்தை அறிமுகப்படுத்தலாம் என்று தோன்றுகின்றது.
ஒரு மனிதன் நின்று கொள்வதற்கு குறைந்த பட்ச இடம் என்று கணக்குப்போட்டுப் பார்த்தால் மூன்று சதுர அடிகள் ஒருவருக்குத் தேவைப்படும். கதிரையில் அமர்ந்திருக்கும் ஒருவருக்கு அதனை விட கூடுதலான இடம் தேவைப்படும்.
இதன் அடிப்படையில் கண்டிக் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தொகை வெறும் 7000ம் மட்டுமே. இந்தக் கணக்கை நாம் எப்படித் துல்லியமாகச் சொல்கின்றோம் என்று கேட்டால் கண்டியில் பிரதான சந்தைக்கு முன்னால் அமைந்திருக்கின்ற முன்றலில் இடப்பரப்பு மற்றும் பக்கத்திலுள்ள சிறு பூங்காவையும் சேர்த்து 150 அடி நீளம் 150அடி அகலம் என்று தான் வரும்.
150 ஐ 150 ல் பெருக்கிப் பார்த்தால் 22500 சதுர அடிகள்தான் கூட்டம் நடாத்தப்பட்ட மொத்த இடத்தின் பரப்பு.
ஒரு மனிதனுக்கு நிற்பதற்குப்போதுமான இடப்பரப்பை அதாவது மூன்று சதுர அடியால் மொத்தப் பரப்பை பிரித்துப் பார்த்தால் அந்த இடத்தில் இருந்த மக்கள் தொகையை கண்டு கொள்ள முடியும். அதன்படி 7500 பேர் மட்டுமே இந்த இடம் கொள்ளும். மேடை போடப்பட்ட இடம் கதிரைகள் போடப்பட்ட இடம் என்று கூட்டிக் கழித்துப் பாத்தால் 7000 பேருக்கே அங்கு நிற்கமுடியும். அரசியல் கட்சிகள் கூட்டத்திற்கு வந்தவர்கள் பற்றிச் சொல்கின்ற கணக்குகளை இதன் பின்பு மக்கள் நம்ப வேண்டியதில்லை. எமது சூத்திரத்தின்படி கூட்டம் நடக்கின்ற இடத்தின் பரப்பை வைத்து கணக்கை செய்து பார்த்தால்;. உண்மையான கணக்கை கண்டு கொள்ள முடியும்.
கண்டியில் நடந்த மஹிந்த விசு வாசிகளின் கூட்டத்திற்கும் வழக்கம்போல் மாத்தறை, திக்வெல்ல, தங்கல்லை கொழும்பு கம்பஹ போன்ற இடங்களில் இருந்து ஆட்கள் பஸ் வண்டிகளில் இந்த முறையும் அழைத்து வரப்பட்டிருந்தனர். எனவே கண்டிக் கூட்டத்தில் உள்ளுர் மக்கள் 4000 பேர் அளவிலேயே கலந்து கொண்டார்கள் என்பது எமது கணிப்பு.
வருகின்ற பொதுத் தேர்தலும் ஐ.தே.க.வும்.
நாம் தொடந்து சொல்லி வருகின்ற ஒரு விடயம்தான் பொதுத் தேர்தலுக்கு ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் தன்னை உரிய முறையில் தயார் செய்து கொள்ள வில்லை என்பது. என்றாலும் வெற்றி வாய்ப்பு தன் காலடியில் இருக்கின்றது என்றுதான் அது நம்பிக்கொண்டு தொழிற்படுகின்றது.
எமது வாதத்திற்கு ஒரு நல்ல உதாரணத்தை மக்களுக்குத் தரலாம் என்று தோன்றுகின்றது. அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்குக் கிழக்குத் தவிர்ந்த ஏனைய 138 தொகுதிகளில் வெற்றிலை வெற்றி பெற்ற ஆசனங்கள் 88. அன்னச் சின்னத்தில் போட்டியிட்ட மைத்திரியால் வெற்றி கொள்ள முடிந்த ஆசனங்களின் எண்ணிக்கை 48 மட்டுமே.
இந்த 48 தொகுதிகளை வெற்றி கொள்ள சுதந்திரக் கட்சி மைத்திரி அணி, ஜேவிபி, பொன்சேக்கா, மலையகச் கட்சிகள். மற்றும் சில்லரைகளின் வாக்குகளும் இதில் அடங்குகின்றது என்பது. நாம் மேற் கொண்ட ஆய்வுகள் மூலம் தெரியவருகின்றது. எனவே இதில் ஐ.தே.க.வின் வாக்குகள் எத்தனை என்று பார்த்தால் வருகின்ற பொதுத் தேர்தலில் அதன் நிலமை புரியும். சுதந்திரக் கட்சி பிளவு பட்டால் மட்டுமே ஐ.தே.க.வுக்கு வசந்தம்.


0 Comments