நடைபெற்று உலகக் கிண்ணத் தொடரில் நேற்று நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்ததையடுத்து இரு அணிகளின் இரசிகர்கள் இடையே இடம்பெற்ற வாள்வெட்டில் இருவர் படுகாயமடைந்த சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
நேற்று சிட்னியில் நடைபெற்ற இலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையான போட்டியில் இலங்கை அணி தோல்வியை தழுவியுள்ளது.
இதனையடுத்து இப்போட்டியை பார்த்த கிளிநொச்சியைச் சேர்ந்த தென்னாபிரிக்க அணியின் ரசிகர்கள் இலங்கை அணியின் ரசிகர்களை கேலிக்கை செய்துள்ளனர்.
பின்னர் இரு குழுக்கள் இடையும் மோதல் ஏற்பட்டு வாள்வெட்டில் முடிவடைந்துள்ளது. இச்சம்பவத்தில் ரஜினிகாந், விஜயகாந்த் ஆகிய இளைஞர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


0 Comments