இலங்கையர்களால் சுவிஸிலும் சவூதி அராபியாவிலும் வைப்புச் செய்யப்பட்டுள்ள இரகசிய கறுப்புப் பணம் தொடர்பில் தகவல்கள் தருமாறு கோரப்படவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
மத்தள விமான நிலையம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் நுரைச்சோலை அனல் மின்சார மையம் ஆகியவற்றில் இருந்து பெறப்பட்ட பணம் சிலரால் சுவிஸிலும் சவூதியிலும் வைப்புச் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை முன்னைய அரசாங்கத்தின் மீது ஊழல்கள் தொடர்பில் சுமார் 2000 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இன்னும் 6 மாதங்களுக்குள் முன்னைய அரசாங்கத்தி;ல் மோசடி செய்த முக்கியமானவர்களின் விபரங்கள் வெளியிடப்படும் என்றும் சேனசிங்க தெரிவித்துள்ளார்.

0 Comments