தேசிய அரசாங்கம், நல்லிணக்கம், நல்லாட்சி
என முன்னேறிக்கொண்டிருக்கும் அரசுக்கு சவால் விடுக்கும் வகையில் பொது பல
சேனாவின் ‘சிங்ஹலே’ தேசக் கொடியை தலதா மாளிகை திருமண மண்டப பகுதியில்
ஏற்றுவதற்கு இடம்பெற்ற முயற்சியொன்றினால் அங்கு பதற்ற நிலை தோன்றியுள்ளதாக
தகவல்கள் தெரிவிக்கின்றன. பௌத்த துறவிகள் குழுவொன்றின் தலைமையில்
இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு அங்கு விரைந்த பொலிசார் இந்நடவடிக்கையைத்
தடுத்துள்ளனர். இதனால் இரு தரப்புக்குமிடையில் பதற்ற நிலை தோன்றியுள்ளதும்
தேர்தலை முன் வைத்து பேரினவாத பொது பல சேனா தலையெடுக்க ஆரம்பித்திருப்பதும்
ஆறாம் திகதி கண்டியில் மஹிந்த ஆதரவுக் கூட்டம் இடம்பெறவிருப்பதும்
குறிப்பிடத்தக்கது.
0 Comments