Subscribe Us

ரயிலில் கிறுக்கியவர்களுக்கு பிரம்படியும் 9 மாத சிறையும்

சிங்கப்பூரில் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியமை மற்றும் அத்துமீறி நுழைந்தமை ஆகிய குற்றங்களுக்காக ஜெர்மனியர்கள் இருவருக்கு 3 பிரம்படிகளும் 9 மாதச் சிறையும் தண்டனைகளாக அளிக்கப்பட்டுள்ளன.
ரயில் தரிப்பிடம் ஒன்றுக்குள் நுழைந்துள்ள இருவரும் ரயில் ஒன்றின் மீது ஸ்ப்ரே மூலம் எழுத்துக்களை கிறுக்கியுள்ளதாக குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளனர்.
குற்றம் இழைத்துள்ள இருவரும் இருபதுகள்-வயதில் இருப்பவர்கள் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்தக் குற்றங்களை இழைத்துவிட்டு சிங்கப்பூரில் இருந்து வெளியேறியிருந்த இருவரும், பின்னர் அண்டை நாடான மலேஷியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்றத்தில் மிகவும் கவலைப்பட்டவர்களாக காணப்பட்ட இருவரும் தங்களின் செயல்களை 'முட்டாள் தனமான தவறுகள்' என்று கூறியுள்ளனர்.

Post a Comment

0 Comments